Wednesday, 7 March 2012

Womens day special

மகளிர்தின ஸ்பெஷல் - அம்மா
Image
இந்த உலகம் முழுமை பெற்றது பெண் படைக்கப்பட்ட பின்புதான் என்பது பலருக்கும் தெரிந்த்தே. இருப்பினும் அறிவியலோ மதமோ எது எப்படி இருந்தாலும் உலகம் தோன்றிய இத்தனை காலங்களுக்கிடையே பெண்களின் வளர்ச்சி என்பது நிகரற்றதாக இருக்கிறது. ஆளுமை , அறிவு , அன்பு என அத்தனை துறைகளிலும் ஆண்கள் பெண்களை விட பின் தங்கித்தான் இருக்கிறார்கள் (பல இடங்களில் வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை) .
பெண்கள் வளரும்போதுதான் உலகமும் வளர்ச்சி பெறுகின்றது.
கண்டுபிடிப்புகள் பலதும் ஆண்களால்தான், ஆயினும் வெற்றிக்கான காரணம் பெண்ணாகத்தான் இருக்க முடியும் . . . (உதவியும் , தொந்தரவு செய்யாமலும், ஊந்துதலும்)
பலப்பல பெருமைகளை கொண்ட பெண் இனத்தை போற்றிட வாழ்த்திட என ஒரு தினம் . . மார்ச் 8 . . இன்று
மனம் மகிழ்ந்து
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
பாராட்டுகிறேன்
. . . . . கிறேன்
நான் கடந்த வந்த இந்த 34 ஆண்டுகால கட்ட்த்தில் என்னை நானாக்கிய பெண்களை பற்றி நினைத்து பார்க்கிறேன் , பெருமையாக இருக்கிறது அவைகளை இங்கே பதிக்கவும் விரும்புகிறேன் . .
எங்கிருந்து துவங்கலாம் என்ற சிந்தையில் . . துவக்கம் என்பது துவக்கமாக இருக்க வேண்டும் என்பதால்
Image
அம்மா . . .
இந்த வார்த்தை உச்சரிக்கும் போது யாருக்கும் தோணும் அந்த கம்பீரம், அன்பு, தியாகம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
மிடில்கிளாஸ்  என்று சொல்லமுடியாத ஒரு குடும்பமாகத்தான் எனக்கு என் குடும்பம் அறிமுகம். ஆம் முதல் பிள்ளையாக நான் பிறக்கும் போது நாங்கள் தனியாக ஒரு ஓரே அறை கொண்ட வீட்டில்தான் இருந்தோம், மீன்பிடித்தொழில்தான் என்றாலும் அப்பாவுக்கு கட்டுமரத்தில் போக விருப்பமிருந்த்தில்லை மாறாக கப்பலில் மீன் பிடிக்க போக விசாகப்பட்டணத்திற்கு போனார். வந்தார் . . போனார் . . இப்படி பட்ட துவக்க காலத்தில் அப்பாவுக்கு ஒழுங்காக தொழிலுக்கு போக மாட்டார் என்ற அவப்பெயரும் வர . .அம்மா ஒரு முடிவுக்கு வந்தார்கள் . . பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் அம்மாவின் கட்டுக்கோப்பான வருமானத்திற்கு ஏற்ப செலவுகள் என குடும்பம் நன்றாகவே நடந்த்து.
இதற்குள் இரு தங்கைகளும் பிறந்திருக்க, வருமானத்தை அதிகபடுத்த வேண்டிய கட்டாயம் , அப்பாவும் வெளிநாடு செல்ல விருப்பமாக பல இடங்களுக்கு அலைந்து இறுதியாக விசா ஒன்றும் கிடைத்த்து. அதற்காகவும் பல ஆயிரங்களை அம்மாவே ஏற்பாடு செய்து அப்பாவை சவுதிக்கு அனுப்பி வைத்தார்கள் . .
இதுநாள் வரை ஒவ்வொரு நாளும் அன்றைய வருமானத்தில் கடந்திருந்தாலும் கடன் என்ற வார்த்தை கேட்டிருக்கவில்லை.
சவுதியில் அப்பாவுக்கு நல்ல வேலை கிடைக்க எங்கள் குடும்பம் வளர்ச்சி கண்ட்து. கிடைக்கின்ற பணத்தை தேவையான அளவில் செலவு செய்து மிச்சம் பிடிச்சி என எங்களை எங்கள் குடும்பத்தை அம்மா நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்கள், புதிய வீடு ஒன்று வாங்கினோம் ஒரு அறை வீட்டிலுருந்து முதல்முறையாக 5 செண்ட் இட்த்தில் இரண்டு படுக்கையறை சமயலறை ஹால் பாத்ரூம் முற்றம் வீட்டை சுற்றி காம்பவுண்ட் என்ற அளவில் படர்ந்த்து எங்கள் வீடு . .
இந்நிலையில் அப்பாவும் ஊர் வந்து சேர, மீண்டும் அம்மாவின் ஆலோசனை படி மளிகை கடை தொடங்கினோம், நானும் சவுதி போனேன் – என் தங்கையின் திருமணம் – என் திருமணம் – அடுத்த என் இளைய தங்கையின் திருமணம் என எல்லா நல்ல காரியங்களையும் நட்த்திய தன் ஆளுமையை அம்மா நிலை நாட்டினார்கள்.
இன்று நல்ல நிலையில் இருக்கிறோம் . . .அம்மா நினைவில் இருக்கிறார். நிறைந்து இருக்கிறார்.
இடையில் சிலபல குடும்ப விசயமாக பல மன வருத்தங்களை அம்மாவுக்கு ஏற்படுத்தி இருக்கிறேன். எனினும் அவர்களின் இறுதிகாலத்தில் என்னோடும் அவங்க மருமகளோடும் அவங்க பேரனோடும் சந்தோசமாகவே இருந்தார்கள்.
என் திருமணம் வரையிலான என் வளர்ச்சியின் மொத்த பங்கும் அம்மாவுடையதே – என் திருமணம் கூட அம்மாவின் வெற்றிதான்.
இப்படி என்னை உருவாக்கிய என் அன்னையின் முன் நான் ஒன்றுமல்ல என்று உணர்கிறேன் . .
அம்மா உன்னை வணங்குகிறேன் . . .

No comments:

Post a Comment