மகளிர்தின ஸ்பெஷல்
மகளிர்தின ஸ்பெஷல்
அம்மா விட்டு சென்ற பிறகு அல்ல, அம்மா எனக்கு திருமணம் செய்ய தீர்மானித்து பல இடங்களில் விசாரித்த போதும், அம்மா முதன்முதலில் பெண் பார்க்க என போனது என் மனைவியின் வீட்டிற்குத்தான்.
அந்த முதல் நாள் என் அம்மாவை வெகுவாக கவர்ந்துவிட்டாள் என் மனைவி, என் மனைவியின் இயற்கையான பல நல்ல குணங்களில் ஒன்று. யாராக இருந்தாலும் உடல்நலத்தில் அக்கறை காட்டுவாள் (நர்ஸிங் கோர்ஸ் படித்தவர்), அதுபோலவே அம்மாவின் உடல்நலத்தை பற்றி விசாரித்து பல விசயங்களை பகிர்ந்து கொண்ட்து முதல் சந்திப்பில் அம்மாவை வெகுவாக கவர இவள் தான் என் மருமகள் என முடிவே செய்துவிட்டார்.
அப்போது இருந்தே என் வாழ்வின் மிக முக்கிய பங்கு வகிக்க துவங்கி விட்டாள் என் மனைவி.
திருமணம் முடிந்த்துமே பறந்து விடும் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் போல்ல்லாமல் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஊரிலே நின்று விட்டேன், எனவே எனக்கு வருமானம் இல்லாத நிலை, புது மனைவி என ரொம்பவே திண்டாடிவிட்டேன், வருமானம் இல்லாத காரணத்தால் குடும்ப பிரட்சனைகள் வரத்துவங்கின, ஏறக்குறைய மதிப்பில்லாத நிலைக்கு தள்ளட்டப்பட்ட என்னை மீண்டும் தூக்கி நிறுத்தியவள் அவள்.
இன்று எனது சொந்த உழைப்பில் நிலம் வீடு கார் என வளர்ந்துவிட்டாலும் எல்லாவற்றிற்கும் துவக்கம் என் மனைவிதான்.
அவளாலே நான் ஆளானேன் என்று சொல்ல எனக்கு தடையேதும் இல்லை.
இயல்பாகவே நான் வீட்டை விட்டு எங்கும் அதிகம் செல்லாதவன் ( அம்மா பொத்தி பொத்தி வளர்த்தார்கள்) திருமணத்திற்கு பிறகுதான் பொறுப்பானவனாக மாறினேன் மாற்றியவள் மனைவி.
எங்களுக்கு இதுவரை சுகங்களை காட்டிலும் சோதனைகளே அதிகம் அச்சோதனை காலங்களில் துணையாக தூணாக நின்று நான் சாய்ந்து விடாமல் தாங்கி கொண்டவள் அவள் . .
பெண்மைக்கே உரிய எல்லா குணங்களும் பெற்றவள், கோபம் என்ற குணம் மட்டும் கொஞ்சம் அதிகமாக அதே சமயத்தில் கோபத்தை உடனே மறந்துவிடுபவளாகவும் இருக்கிறாள். மனதளவில் கோபம் என்பது அவளுக்கு இருப்பதே இல்லை.
தன்னைப்போன்று அனைவரும் இருக்க வேண்டுமென்ற குணம் அவளை பலரிட்த்திலிருந்தும் விலக்கி இருக்கிறது. ஐந்து விரலும் ஒரே போல் இல்லை என்பதை இப்போது உணரத்துவங்கி இருக்கிறாள்.
எனக்கான சந்தோசம் அவளுடைய சந்தோசம் என்பதை உணர்ந்தவளாக என் வெற்றியில் எப்போதும் பங்கு கொள்பவளாக இருக்கும் அவளுக்கு என் நன்றி
பிஸியான ஒரு அலுவலகத்தில் வேலை இருந்த போதிலும் என்னவளின் மிஸ்டுகால்களே அதிகம் என்கின்றது என் கைபேசி . .
எட்டு வருடங்களுக்கு பிறகு இப்போதுதானே இரு வேறு இடங்களில் . ம் ம் இதுவும் புது அனுபவம்தான் . .
எனினும் உள்ளத்தில் இருந்து ஊக்குவிக்கும் உன்னை வாழ்த்துகிறேன் . .
இத்தினம் நீ பெருமை கொள்ள அல்ல உன்னால் நான் பெருமை கொள்ள . .
பெண்ணே
பெண்மையே
உன்னை நேசிக்கிறேன்
உன்னை சுவாசிக்கிறேன்
உன்னை யாசிக்கிறேன்
நீ நானாக இருப்பதால் என்னையே நான்
வாசிக்கிறேன் . . . .
நான் உன்னை காதலிக்கிறேன் . .
No comments:
Post a Comment