இப்போதும்
அடிக்கடி
உன் நினைவுகள்
எழும்,
சில் மிஷங்களும்
பரிமாறல்களும்
என்னை அறியாமலேயே
உதட்டில்
புன்னகையைத் தோற்றுவிக்கும்,
வீதியில் போகும் போது
நான் அடிக்கடி சிரிப்பதாக
தெரிந்தவர்கள் கூறுவார்கள்
காரணம் இதுவாகவும்
இருக்கலாம்,
நானும்
பலர் தன் பாட்டிற் சிரிப்பதை
வீதிகளில் கண்டிருக்கிறேன்
அவர்களுக்கும்
இது தான் காரணமோ தெரியவில்லை,
ஆனாலும்
கடந்த காலங்களைப்போல
அந்தச் சிரிப்புக்கு பின்னர்
எழுவதான
’கண்ணீரும் மனச்சோர்வும்’
இப்போது
இல்லை என்றே கூறுவேன்,
ஆயினும்
உன் நினைவுகள்
அடிக்கடி எழும்
ஏதோ எழுதுவேன்
மெளனமாவேன்..
No comments:
Post a Comment