கோஹ்லிக்கு ஐசிசி விருது
கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் விராத் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான (201112) ஐசிசி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சார்பில் 2011 12ம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனை, நடுவர்களுக்கு விருது வழங்கும் விழா, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இலங்கை வீரர் சங்கக்கரா ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர் என 2 விருதுகளை தட்டிச் சென்றார். அவர் 14 டெஸ்டில் 1,444 ரன் (சராசரி: 60.16, சதம் 5, அரைசதம் 5), 37 ஒருநாளில் 1,457 ரன் (3 சதம், 39 கேட்ச்) எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக இந்தியாவின் விராத் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த ஓராண்டில் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,733 ரன் (சராசரி: 66.65, சதம் 8, அரைசதம் 6) குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோர் 183 ரன்னை பதிவு செய்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் இதுவரை 90 போட்டிகளில் விளையாடி 3,886 ரன் (சராசரி: 51.81) எடுத்துள்ளார்.
Colombo: India`s Virat Kohli was on Saturday rewarded for his dream run in the last 12 months as he was named the ODI Cricketer of the Year, while Kumar Sangakkara walked away with three honours, including the Cricketer of the Year, in the ICC annual awards function here.