Friday, 27 January 2012

kadhal parts.

காதலின் பரிமாணம் 

அன்னையிடம் அன்பு................
தந்தையிடம் பாசம்....................
அண்ணனிடம் கண்டிப்பு...............
அக்காளிடம் அக்கறை...................
தெய்வத்திடம் பக்தி...............
வறுமையிடம் தயவு...............
மனைவியிடம் காமம்...........

கணவனிடம் காதல்......................BY.ஆதித்தன்.

Saturday, 21 January 2012

Mother.

அம்மா.

நம்மை பெற்றெடுத்து பற்று வைத்தவள்
நாளும் கண் விழித்து காவல் செய்தவள்
அன்பு எனும் உளி கொண்டு
அணு அணுவாய் செதுக்கியவள்
கருணைக்கு என்றும் சாட்சியாய் அமைந்தவள்
ஆரவாரம் ஏதுமின்றி ஆளுமையை காட்டுபவள்.
இரவுகளில் இன்னிசைத்து
இறை உணர்வை ஊட்டியவள்
வாழ்க்கை எனும் வானவில்லில்
இயற்கையாய் வண்ணம் சேர்த்தவள்
ஆனந்தம் மட்டுமே நம்மை அணுக
ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்பவள்.BY.ஆதித்தன்.

Wednesday, 11 January 2012

Kadhal Undu

காதல் உண்டு!

காற்றுக்கும் காதல் உண்டு
இலைகளின் மேல்!
நிலவுக்கும் காதல் உண்டு
வானத்தின் மேல்!
பனித்துளிக்கும் காதல் உண்டு!
புற்கள் மேல்!
வண்டுக்கும் காதல் உண்டு
மலர்களின் மேல்!
நண்பர்களுக்கும் காதல் உண்டு
நட்பின் மேல்!
எனக்கும் காதல் உண்டு
தமிழ்த்தாயே உன் மேல்!BY.ஆதித்தன்

Sun.

கதிரவன்

கம்பீரம்"

உறக்கம் மறந்த
உழைப்பாளி இவன் ஒருவனே.

சோம்பலில் சலித்துக் கொண்டதாய்
சரித்திரம் இல்லை.

மனிதா... புரிந்ததா?
உறக்கம் மறந்து
சுட்டெரிக்கப் பிறந்தவன்தான்
உலகை ஆள்கிறான்.

நீயும் உலகை ஆள
சுட்டெரிக்கப் பழகு.
உன்னை ஆளும்
உருப்படாத அசுத்தங்களை...BY.ஆதித்தன்.....

Wednesday, 4 January 2012

காதலிக்கவில்லை

உன்னை யாரும்
காதலிக்கவில்லை
என்று கவலைப்பட வேண்டாம்…
அது
உன் வருங்கால
மனைவியின்
வேண்டுதலாகக் கூட
இருக்கலாம்…………BY.ஆதித்தன்

Head is Clean.

மண்டை காலியாக

வயிறு காலியாக
இருக்கும்போது
சத்தம் போடுகிறது
அதுபோல்
மண்டை காலியாக
இருக்கும்போது
அது சத்தம்
போட்டிருந்தால்
நாமெல்லாம்
அறிவாளி
ஆகியிருப்போம்! BY. ஆதித்தன்

Teacher vs Student.


ஆசிரியர் Vs மாணவன்

ஆசிரியர் : என்கிட்டே நல்லா படிச்சவன் டாக்டராயிருக்கான்,சுமாரா படிச்சவன் பஸ்ல கண்டக்டராயிருக்கான்,இதுலயிருந்து என்னத்தெரியுது?
மாணவன் : ரெண்டு பேருமே, டிக்கெட் கொடுக்கிற வேலையிலயிருக்காங்கன்னு தெரியுது.

Monday, 2 January 2012

Jokes

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.
——————————————————————————————————————————-
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
———————————————————————————————————————————
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
——————————————————————————————————————————-
சார், டீ மாஸ்டர்
டீ போடறாரு,பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,மேக்ஸ் மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
—————————————————————————————————————————

என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.
——————————————————————————————————————————-
டாக்டர் இந்த பக்கெட் ஓட்டை ஆயிடுச்சு.. என்ன பண்ணலாம்.
யோவ். எங்கிட்ட வந்து ஏன் இதை கேட்கிறாய்?பிளாஸ்டிக் சர்ஜரில நீங்கதான் பேமஸ்ன்னு சொன்னாங்க..
—————————————————————–


நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்
——————————————————————————————————————————

ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5
ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா
—————————————————————–


உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
————————————————————-

என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விளக்கும் போது இளிச்சவாய தான்.
————————————————————–


செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது. BY.ஆதித்தன்.

Six Line Kavithai.

இலக்கியம் பல படித்து
இரவு பல வழித்து
கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும்
தொலைபேசியில் நீ சொல்லும்
.ம்.. என்பதற்கு ஈடான
கவிதை என்னிடம் இல்லை.


இனிக்க இனிக்க உன்
நினைவுகளை குடித்துக் கொண்டே
இருப்பதால்...
சர்க்கரை வியாதி வந்துவிடுமோ
என்ற பயம் எனக்கு.


இரண்டு வரி கவிதை சொன்னால்
நான்கு முறை வெட்கப் படுகிறாய்
ஆக மொத்தம் எனக்கு
ஆறு வரி கவிதை............BY.ஆதித்தன்